ஸ்ரீ சண்முகநாயகன் திருக்கோவில்

திருக்கோவில் அமைந்துள்ள இடம்:
போளிவாக்கம் - திருவள்ளுர் மாவட்ட.

Agileits W3layouts

ஸ்ரீ சண்முகநாயகன் திருக்கோவிலின் தனிச்சிறப்புகள்:

சித்தர்களின் தலைவர் மகான் அகத்தியரின் திருக்காட்சி
குருநாதருக்கு கிடைத்தபோது, இவ்விடத்தில் ஆலயம் அமைக்க
ஆணை பிறப்பித்துள்ளார் மகான் அகத்தியர்.
மகான் அகத்தியர் “ஷண்முக நாயகர் தோற்றம்” என்ற தலைப்பில்
பாடல் ஒன்றை நமக்கு அருளியுள்ளார். இப்பாடல் வரிகளில் அவர்
குறிப்பிடும் ஷண்முகநாயகனை சிலை வடிவாய் வடித்து
நமக்கருளியுள்ளார் குருநாதர்.
இத்திருத்தலத்தில் மும்மூர்த்திகளான பிரம்மா, மகாவிஷ்ணு மற்றும்
சிவபெருமான் மூவரும் தம்பதி சமேதராக வீற்றிருக்கின்றனர்.
அதாவது,
பிரம்மா – சரஸ்வதி
மகாவிஷ்ணு – மகாலெட்சுமி
சிவபெருமான் - துர்காதேவி
விநாயகரும், ஐயப்பனும் துவார பாலகர்களாய் இவ்விடம் வீற்றுள்ளனர்.
மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக வீற்றிருப்பதால் திருமண தடை விலக பிரார்த்திப்போருக்கு தடை விலகி மணவாழ்க்கை கைகூடுகிறது.
இறைவனின் வழித்தோன்றல்களாகிய முருகன், விநாயகர் மற்றும்
ஐயப்பன் மூவரும் சிவன்-பார்வதியின் மைந்தர்களாக
போற்றப்படுபவர்கள் ஆவர். இவ்விடத்தில் புத்திர பாக்கியம்
வேண்டுபவர்கள் பிள்ளைப்பேறு பெறுகின்றனர்.
நமது வாழ்வை நிர்ணயித்து வழிநடத்தும் கோள்கள் ஒன்பது. நமது
உடல் இயக்கம் ஒன்பது துவாரங்கள் மூலம் நடைபெறுகிறது.
நமது ஷண்முகநாயகன் திருக்கோவிலில் ஒன்பது தெய்வங்களாய்
அமர்ந்து இறைவன் அருளுகின்றார். ஆதலால் இங்கே நவக்கிரக
தோஷ நிவர்த்தியை இறைவன் வழங்குகின்றார்.
இவ்விடத்தில் சிவபெருமான் உருவ வடிவில் அமைந்துள்ளார்.
பிரதோஷம் என்பது சிவ நடனத்தை குறிப்பதாகும். உருவமின்றி
நடனம் நிகழாது. ஆகையால் பிரதோஷ வழிபாட்டிற்கு இத்தலம்
சிறந்ததாக அமைந்துள்ளது.