இராஜயோக பாடசாலை

பிரம்மசூத்திர இராஜயோக பாடசாலை 2009ம் ஆண்டு முதல் இவ்விடத்தில் இயங்கி வருகிறது. இப்பாடசாலையை தோற்றுவிக்க குருநாதருக்கு பிரம்ம சூத்திர குழுவினர் உதவியாக செயல்பட்டனர்.

Agileits W3layouts

இராஜயோகம்:

மெய்ஞானம் பெற மனிதனை பக்குவப்படுத்தும் கலைகளுள் இராஜயோகக் கலை முதன்மையானதாகும். அது சித்தர்களின் வழிவழியாய் வந்த சித்த பரம்பரையைச் சேர்ந்த அற்புதக் கலையாகும். மெய்ஞானம் பெற மனிதனுக்கு தடையாய் இருப்பது அவனது பாவ , புண்ணிய பதிவுகள் ஆகும். இப்பதிவுகளால் ஒருவரின் மெய்ஞானப் பாதைக்கு தடை ஏற்படாமல் தடுக்க மெய்க்குருவாலும் , இறைவனாலும் மட்டுமே முடியும். மெய்குரு என்பவர் மெய்பொருள் கண்டவராவார். மெய்பொருளை தான் காணாதுமால்ää கண்டவர் போல வேஷமிடுபவர் பொய்குரு ஆவார். குரு என்பவர் மனிதனுக்கும் இறைவனுக்கும் இடையே ஒரு ஏணியை போல செயல்படுகிறார். நாம் எட்ட நினைக்கும் உயரத்தை விட குறைவான உயரம் உடைய ஏணியால் நமக்கு ஒரு பயனும் கிடையாது. குருவானவர் தான் உபதேசிக்கும் கலையில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் நலம். அங்ஙனம் அல்லாத குருவால் சீடனின் தவறுகளைத் திருத்தி வழிநடத்திட இயலாது. எவ்வாறான குருவின் பாதங்களை பணிய வேண்டும் என்று மகான் பாம்பாட்டி சித்தர் தமது பாடல் வரிகளில் விளக்கியுள்ளார்.
வேதப்பொருள் இன்னதென்று வேதங் கடந்த
மெய்ப்பொருளைக் கண்டு மனம் மேவி விரும்பிப்
பேதப் பொருள் இன்னதென்றும் போதனை செய்யும்
பூரணசற் குருதாள்கண் டாடு பாம்பே
வேதநெறி விதித்த வண்ணம் வாழ்ந்து பின் அந்நெறிகளையும் கடந்து மெய்ப்பொருளாகிய இறைவனை உணர்ந்து கலந்து , பின் பிரிந்து இறைவன் நிறைந்துள்ள மனதால் விரும்பி பேரின்பம் இதுவென போதனை செய்யும் பூரண சற்குருவின் பாதம் பணிந்து மேன்மை அடைய கூறுகிறார்.
இத்தனை சிறப்புடைய மெய்குருவிடம் சீடன் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்றும் தமது பாடல் வரிகளில் விளக்கியுள்ளார்.
காற்றுமுடல் பொருளாவி தத்த மாகவே
தானம்வாங்கி நின்றவெங்கங் சற்கு ருவினைப்
போற்றிமனம் வாக்குகாயம் மூன்றும் பொருந்தப்
புகழ்ந்துபு கழந்துநின் றாடு பாம்பே.
"> காற்று , உடல் , பொருள் , ஆவி என எனக்கு சொந்தமானவற்றை தானமாக பெற்று எனது வல்வினைப் பயன்களின் இன்னல் தீர்த்த எங்கள் சற்குருவினை மனம் , வாக்கு , காயம் மூன்றும் பொருந்தப் புகழ்ந்து புகழ்ந்து நின்று ஆடு பாம்பே.
காற்று – உயிர்   மனம் - மனம்
உடல் - உடல்    வாக்கு – சொல்
பொருள் - விந்து    காயம் - உடல்
ஆவி – ஆன்மா
"> குரு சீடனுக்கு இடையே இத்தகைய உறவு மலரவேண்டும். இத்தகைய உறவு மலர உபதேசம் ஏகாந்தமாய் அளிக்கப்பட வேண்டும். குரு உபதேசத்தை சீடன் பிசகாமல் பின்பற்ற வேண்டும். இத்தலத்தில் இராஜயோகக் கலை மேற்குறிப்பிட்டவற்றில் எதுவும் குறைவில்லாமல் இறை அருளோடு உபதேசிக்கப்படுகிறது. இராஜயோகக் கலையை பயிலும் சீடனின் மனம் மெய்ஞானம் பெற பக்குவப்படுகிறது. பக்குவப்பட்ட மனம் உடம்பினுள் உறையும் இறைவனை காட்டுவிக்கின்றது என்று ஞானத்தாய் ஒளவை தமது ஒளவைக் குறளில் விளக்கியுள்ளார்.
“மாசற்ற கொள்கை மனத்தில் உதித்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு”
எங்கும் நிறைந்த மெய்ப்பொருளை எங்கே காண்பது என்று தெரியாமல் தேடும் அன்பர்களை அன்புடன் வரவேற்கிறது போளிவாக்கத்தின் பிரம்ம சூத்திர இராஜயோக பாடசாலை.