குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தரின்

Agileits W3layouts

ஆன்மீக பயணம்:

முன்னுரை:
குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்த சுவாமிகளின் வாழ்க்கை முழுவதும் இறைவனை நோக்கிய பயணமாகவே அமைந்துள்ளது. ஆன்மீகத்தை விரும்பும் அன்பர்களுக்கு; வேண்டிய விடைகள் அனைத்தையும் அண்ணலின் வாழ்க்கை கொண்டுள்ளது. அண்ணலின் அனுபவம் இன்று பலருக்கு விடையாய் நடைமுறையில் உள்ளது. அவரின் உறுதியான உழைப்பிற்கு பரிசாய் இறைவன் தன்னையே அவருக்கு கொடுத்துள்ளதாக அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அறிவார்கள். இவரின் கட்டுப்பாடுள்ள அன்பில் கட்டுண்ட சீடர்கள் அண்ணலை இறைவனின் பிம்பமாகவே பார்க்கிறனர்.
குரு வணக்கம்:-
அரண் அடி சேர்ந்திட
ஆத்ம வணக்கத்தை உபதேசித்து
இகபர வாழ்வு வாழ்ந்திட
ஈர்த்து என்னை ஆட்கொண்ட
உமது தாள் பணிந்திட
ஊன் உள்ளே உருகுதய்யா
என்றென்றும் நினை பணிந்திட
ஏழை எனக்கு அருளுமய்யா
ஐயம் நான் அற்றிட
ஒன்பதை என்னுள் அடைத்து
ஓங்காரத்துள் ஒளி காட்டிட்ட
ஒளஷதமாய் வந்த ஐயனே
குருவே! பிரம்மஸ்ரீ நித்தியானந்தரே சரணம்! சரணம்!!
குரு பிரம்மஸ்ரீ நித்தியானந்தரின் இயல்பு
கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக
என்னும் திருவள்ளுவரின் வாக்கிற்கு ஏற்ப இராஜயோக கலையை கசடறக் கற்று அதை பலருக்கு போதனை செய்வதில் இவரது வாழ்க்கை பயணம் நடைபெறுகிறது.

பெற்றோர்: சென்னை – பூந்தமல்லி, காட்டுப்பாகத்தைச் சேர்ந்த பெருமாள் நாயுடு – ஜெயலட்சுமி தம்பதியருக்கு ஐந்தாவது மகனாக பிறந்தார்.

நித்தியானந்தமே இயற்பெயர்: இவரை பிரசவிக்கும் தருவாயில் தான் இவரது தாயார் தான் கருவுற்றிருப்பதை உணர்ந்துள்ளார். அந்நாள் வரை வயிற்றில் குழுமிக் கட்டி இருப்பதாக எண்ணி அதை கரைக்க மருந்துகள் உட்கொண்டார். கட்டி கரைவதாய் தெரியவில்லை. சாஸ்திர சிகிச்சை பெற்றுக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைத்ததை ஏற்க மனமின்றி வீடு திரும்பிய ஒரு வெள்ளியன்று குழந்தையாய் வெளிப்பட்டார். இவரின் பிறப்பு ஆச்சரியத்தால் இவரின் பெற்றோர் இவருக்கு நித்தியானந்தம் என பெயரிட்டு மகிழ்ந்தனர்.
மாடுகளுடன் மழலைப் பருவம்: இவருக்கு 5 வயது இருக்கும்போது இவரின் பெற்றோர் மனவேறுபாடு காரணமாக பிரிந்தனர். இவரது அன்னையார் நித்தியானந்தரைத் தவிர மற்ற குழந்தைகளை அழைத்துக் கொண்டு தனது தாய் வீடு இருக்கும் திருவள்ளுரைச் சேர்ந்த போளிவாக்கத்திற்குச் சென்று விட்டார். இவரின் தந்தை உடல்நலக் குறைவால் அச்சமயம் வருந்தி வந்தமையால் நித்தியானந்தரை அழைத்துக் கொண்டு தனது அக்கா வீட்டிற்குப் பயணமானார். அங்கு பெருமாள் நாயுடு ஐயாவின் உடல்நிலை மிகவும் மோசமாகி விட்டது. இந்நிலையில் நித்தியானந்தருக்கு அத்தை வீட்டில் மாடு மேய்க்கும் பணி வழங்கப்பட்டது. மாடு மேய்க்க கூலியாக இவருக்கும் இவரது தந்தைக்கும் உணவு வழங்கப்பட்டது.
அத்தை வீட்டு பழைய துணிகள் நித்தியானந்தருக்கு பரிசளிக்கப்பட்டன. இந்நிலையில் இவரது மனம் வெகுவாய் பாதித்து “எல்லா குழந்தைகளும் பள்ளிக்குச் செல்கின்றனர்ää தாய் தந்தையர் பராமரிக்கின்றனர், என்னை என்னவென்று கேட்பதற்கு ஆள் இல்லையே” என்று வருந்தினார். மனிதர்கள் யாரும் கண்டு கொள்ளாததால் தன் மனக்குறைகளை மாடு மேய்க்கும் சமயத்தில் அங்குள்ள பொன்னியம்மன் கோயிலுக்குச் சென்று முறையிட்டு வேண்டினார்.
காலங்கள் உருண்டோட, சூழ்நிலைகள் மேலும் மோசமானதே தவிர முன்னேற்றம் இல்லை. வேண்டுதல்கள் கடவுளின் காதில் கேட்டதா? இல்லையா? என்ற ஐயத்தின் காரணமாக சில குறும்புத்தனமாக பரிட்சைகளை மேற்கொண்டார். சில காகிதங்களைக் கிழித்துப் போட்டு கடவுள் இருக்கிறார் என்றால் இவை ஒட்டிக் கொள்ள வேண்டும் என்று கண்மூடி அமர்ந்து கொள்வார். ஒட்டாத காகிதத்தைப் பார்த்து விரக்தியுடன் சென்று விடுவார். ஆயினும் ஆலயம் செல்லத் தவறுவதில்லை. ஏதோ ஒரு தூண்டுதல். கடவுள் இருக்கிறாரா இல்லையா என ஆராய்வது இப்பிஞ்சு நெஞ்சில் பசுமரத்து ஆணி போல பதிந்து இக்கோவிலில் இல்லையென்றால் வேறு எங்காவது இருக்கலாமோ என்று தனது ஆன்மீக பிரயாணத்தை ஐந்து வயதிலேயே தொடங்கி விட்டார்.
அயன்புரத்தில் அடைக்கலம்: நித்தியானந்தரின் தாயாருக்கு அவ்வப்போது இவரைப் பார்த்து இவரின் நிலையை அறிய ஆவல் வந்ததால் ஜெயலெட்சுமி அம்மாவின் அக்காவாகிய ஜானகி அம்மாவையும் அழைத்துக் கொண்டு நித்தியானந்தரின் அத்தை ஊரான திருவள்ளுரைச் சேர்ந்த மேல்நல்லாத்தூருக்கு இருவரும் பயணமாயினர். நித்தியானந்தரின் நிலை கண்டவர்கள் நிலைகுலைந்து போயினர். ஜானகி அம்மாள் திருமணம் செய்து கொள்ளாமல் சென்னை அயன்புரத்தில் வாழ்ந்து வந்தார். ஜானகி அம்மாள் நித்தியானந்தர் மீது தாயன்பினை பொழிந்து தன்னுடன் வருமாறு அழைத்தார். அன்பிற்கு ஏங்கிய நித்தியானந்தரும் ஜானகி அம்மையாரை தனது தாயாக ஏற்று அயன்புரத்தில் அடைக்கலமானார். நித்தியானந்தரின் அயன்புரப் பிரயாணத்தின் போது அவருக்கு வயது பதினொன்றை கடந்திருந்தது.
சஷ்டி மாலை: ஜானகி அம்மையார் அவர்கள் நித்தியானந்தரை அயன்புரம் அழைத்து வந்தபிறகு அவரது எதிர்காலம் குறித்து ஆலோசித்து கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொடுக்க விரும்பி தையல் கடையில் பணியில் அமர்த்தினார். தையல் தொழிலை நித்தியானந்தர் நேர்த்தியுடன் பயின்று வரும் வேளையில் ஸ்ரீ கந்தசஷ்டி கவசம் பாடலை கேட்க நேர்ந்தது.
துதிப்போர்க்கு வல்வினைபோம், துன்பம்போம் நெஞ்சிற்
பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்து ஓங்கும்
நிஷ்டையுங் கைகூடும் நிமலர் அருள் கந்தர்
சஷ்டி கவசந்தனை…
என்று தொடங்கும் வரிகளைக் கேட்கும் போதெல்லாம் மனம் பரவசமடைவதை உணர்ந்த நித்தியானந்தர் இப்பாடலை முழுவதும் கற்க எண்ணி, இப்பாடல் வரிகளில் முழுவதும் மனதுற்றார். அதில்
சஷ்டி மாலை: ஜானகி அம்மையார் அவர்கள் நித்தியானந்தரை அயன்புரம் அழைத்து வந்தபிறகு அவரது எதிர்காலம் குறித்து ஆலோசித்து கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொடுக்க விரும்பி தையல் கடையில் பணியில் அமர்த்தினார். தையல் தொழிலை நித்தியானந்தர் நேர்த்தியுடன் பயின்று வரும் வேளையில் ஸ்ரீ கந்தசஷ்டி கவசம் பாடலை கேட்க நேர்ந்தது.